சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 25 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் இவ்விரு மாவட்டங்களிலும் 24 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அதேவேளை, இன்று காலை முதல் மலையகத்தில் கடும் மழைபெய்து வருகின்றது.