திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் வீடொன்றின்மீது இன்று (05.07.2023) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
அனர்த்தம் ஏற்படும்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. சமையலறை மற்றும் படுக்கையறை முற்றாக சேதமடைந்துள்ளன என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தோட்ட நிர்வாகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
க.கிஷாந்தன்