மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டி, பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கண்டி, பேராதனை, கன்னோருவை, கெலிஓயா, ஹெட்டிபொல, வில்கமுவ ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது, அவரிடம் இருந்த போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சிறிய டிஜிட்டல் தராசு, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
