லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ விலைகளை சமன்படுத்த நடவடிக்கை

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்திற்குள் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles