கொட்டகலையில் 3 வயது சாதனை சிறுமிக்கு கௌரவிப்பு

சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செந்தில்குமார் பவிக்ஷ்னாவிற்கு இன்று கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

கொட்டகலை பகுதியை சார்ந்த 3வயது நிரம்பிய செந்தில்குமார் பவிக்ஷ்னா உலக நாட்டு தலைவர்களின் பெயர்களை குறுகிய நேரத்திற்குள் அடையாளப்படுத்தி கூறி குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த சாதனைக்கு கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனையாளராக சர்வதேச சாதனையாளர் புத்தகம் அறிவித்து இன்று 22/07/2023 அதற்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இக்கௌரவிப்பு விழாவில் கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்ட வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles