டெங்கு நோய்த்தொற்றினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்துள்ளதாக சிறிலங்காவின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரையில் மொத்தமாக 55,260 டெங்கு நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் அதிகளவில் மேல் மாகாணத்தில் 27,400 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் 11,973 வழக்குகள் அதிக எண்ணிக்கையானவையாக பதிவாகியிருக்கிறது.
மேலும், டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படும் இடங்களாக 52 பகுதிகளை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 5,940 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.