நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான அனைத்து வீதிகளையும் வரைபடமாக்கத் திட்டம்

2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இதன்மூலம் வீதிகள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பது அடையாளம் காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக பொதுமக்களுக்கு சேவைகளை உத்தியோகபூர்வமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக செயற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர,

“இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுமக்களுக்கு பாரிய சேவைகளை ஆற்றுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’“ என்று தெரிவித்தார்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளையும் மேம்படுத்தும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பொது மக்களுக்கு ஒன்லைன் (ONLINE) தொழில்நுட்பம் ஊடாக சேவைகளை வழங்க அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றிகரமாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இந்த வருட இறுதியில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகள் தவிர்க்கப்படும் என்றும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் நிவர்த்திசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்கள் தமது நிர்வாகப் பகுதிக்குரிய வீதிகளை வரைபடமாக்கும் (Mapping) பணிகளை நிறைவுசெய்து அதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என்றும், ஆனால் இந்த வேலைத்திட்டம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனை நவீன தொழில்நுட்பத்தின் (GIS, GPS) ஊடாக செயற்படுத்த உள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தை அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வீதி மின் விளக்குகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், இதன்மூலம் உள்ளூராட்சி மன்றங்கள் மின்சாரத் தேவைக்கு செலவிடும் பாரியளவு நிதியை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் ஒத்துழைப்பைப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றங்களினால் இடம்பெறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. ஆனாலும் பொது மக்களின் தேவை கருதி 160 புதிய பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் 20 பாலங்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இத்திட்டங்களுக்காக இந்த வருடம் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முழுமையான திட்டத்துக்கு 14,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள பாலங்களும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல வருடங்களாக தற்காலிக அடிப்படையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் சேவை புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles