பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
லுணுகலை அடாவத்தை 13வது கொலணி பகுதியில் இன்று (28) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு லுணுகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து அடாவத்தை உள்வீதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி தூரம் வரை தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பேருந்தில் 6 மாணவர்கள் பயணித்ததாகவும் அதில் அடாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 7 வயது மாணவரொருவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ராமு தனராஜா