மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ இன்று ஆரம்பமானது.
இன்று தலைமன்னாரில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.