அவிசாவளை, சீதாவக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் அமைந்துள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தினால் 08 தொழிலாளர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.