லிந்துலையில் ஆற்றில் விழுந்து இளைஞன் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார்.

குறித்த இளைஞன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்ட சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வோல்ட் ரீம் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் தனது கால்களை கழுவுவதற்காக சென்ற போது தவறி விழுந்து மரணித்துள்ளார். இச்சம்பவம் இன்று பகல் 1:30 மணி அளவில் நடந்ததுள்ளது.

சம்பவத்தை அறிந்த மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவலை வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு நீரில் மூழ்கிய இளைஞனை தேடும் பணியை தொடர்ந்தனர்

சுமார் மூன்று மணிக்கியாளர்களின் பின் நீரில் மூழ்கிய இளைஞன் சடலமாக மீட்க பட்டு திடீர் மரண பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பான விசாரணைகலிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles