பஸ் கட்டணம் அதிகரிப்பு!

நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles