கடவளை பகுதியில் முறிந்து விழுந்தது மரம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன, கடவளை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று இரவு பெய்த மழையால் வீதியின் அருகாமையிலுள்ள பாரிய வாகை மரமொன்று முறிந்து விழுந்ததில் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தடை பட்டிருந்தமையினால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி, ஹட்டன் – நாவலப்பிட்டி, ஹட்டன் – கினிஹத்தேன போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகளும் பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மரம் முறிந்து விழுந்த பகுதிக்கு வருகைத்தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து மரத்தினை அகற்றினர்.

அதன் பின்னர் குறித்த வீதியின் போக்குவரத்து வழமைப் போல் இடம் பெற்றதோடு அந்த வீதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நிருபர்கள்  – டி. சந்ரு, பொகவந்தலாவ சதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles