மூன்றெழுத்துடையவரே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்ககூடியதாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தங்கத்துக்கு ஏன் அதிக விலை? மாணிக்கம், முத்துகளுக்கு ஏன் மதிப்பு? அவை வீதியில் கொட்டிகிடந்தால் கருங்கல்லுக்குரிய மதிப்பே கிட்டும். எனவே, மொட்டு கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் பெறுமதிமிக்கவர், பதற்றப்பட வேண்டாம், உரிய நேரத்தில் அறிவிப்புவரும்.
அரசியலில் ‘நிராகரிப்பு’ என்பது நிரந்தரம் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணம் இதற்கு சிறந்த சான்று. ” – என்றார்.
