‘காதல் விவகாரம்’ – யாழில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் , பெற்றோல் குண்டு தாக்கு நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles