ஒன்றான வெற்றி: எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்

இது இலங்கை வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது

இலங்கை பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுத் தொடர் பாடலின் பின்னணியிலுள்ள தொனிப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது. இலங்கையர்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது களத்தில் உள்ள வீரர்களைப் பற்றியது மட்டுமல்லாமல் அசராமல் நீண்டகால மிகைப்படுத்தலால் களத்தில் போட்டியிடுவதற்கு வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் ரசிகர்களைப் பற்றியதாகும்.

LPL தொனிப் பொருள் பாடலை மற்றும் இசையை சரிகமா இசைக்குழுவுடன் இணைந்து இலங்கை பாப் இரட்டையர்களான பாத்திய மற்றும் சந்தூஷ் (BNS) ஆகியோர் தயாரித்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைக்க கிரிஷன் ஈ மற்றும் சந்தூஷ் வீரமனும் இசையமைக்க உதவியமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற ADK உடன் இணைந்து தமிழ் வரிகளை றோய் ஜெக்சன் பாடியுள்ளதுடன் தமிழ் கவி வரிகளை கே.சி. பிரகாஷ் எழுதியுள்ளார். இந்த பாடலின் ஆங்கில வரிகளை ரந்தீர் விதான எழுதியுள்ளதுடன் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷியாம் டீன் பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கள கவி வரிகளை யொஹான் அபேகோன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட்டின் பிரதித் தலைவரும் மற்றும் LPL போட்டித் தொடரின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன கூறுகையில், BNS தனது இசையின் மூலம் இலங்கையில் கிரிக்கெட்டின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வேலையை செய்துள்ளனர். ரசிகர்கள் இதனை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அழகான விளக்கக் காட்சிகள் மூலம் அவர்கள் பிரமாண்டமாக LPLஐ இணைப்பார்கள்.’ என தெரிவித்தார்.

‘உலகளாவிய கிரிக்கெட்டில் எமக்கு சொந்தமான இலச்சினையான லங்கா பிரிமியர் லீக் தொனிப் பொருள் பாடலை இயற்றக் கிடைத்தமை எங்களுக்கு ஒரு மரியாதையாகும். இந்த தனித்துவமான அனுபவத்தை எமது நாடு முழுவதிற்கும் கொண்டுசெல்ல வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG நிறுவனத்திற்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என BNS தெரிவித்தனர்.

துபாயை தளமாகக் கொண்ட விளம்பரத்தாரரான IPGஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோஹன் கூறுகையில்> ‘LPL என்பது கிரிக்கெட்டை பற்றியது மட்டுமல்ல> இது கலாச்சாரத்தைப் பற்றியது, இது இங்குள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் அற்புதமான உத்வேகத்தைப் பற்றியதாகும். LPLஇன் அத்தியாவசிய அம்சங்களை சுருக்கமாக இணைக்கும் இந்த அற்புதமான கலவையைக் கொண்டு வந்ததற்கு BNSக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்தார்.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கிலும் கண்டி பல்லேகெல விளையாட்;டரங்களிலும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்து 15 அணிகள் 23 போட்டிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் கொழும்பு அணி தம்புல்லை அணியை எதிர்கொள்ளவுள்ளது. மாலை 3.30க்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வின் பின்னர் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இறுதிப் போட்டி டிசெம்பர் 13ஆம் திகதி இத்தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுவதோடு இறுதி நிகழ்வுகள் டிசெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் கண்டியில் நடைபெறும். கிறிஸ் கெய்ல், சயிட் அப்ரிடி, வஹாப் ரியாஸ், ஷொயெப் மலிக், கார்லோஸ் ப்ரைத்வைட், சமித் படேல், லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், லியாம் பிளங்கெட் மற்றும் பலர் அடங்கிய உலக நட்சத்திரங்கள் 15 கிரிக்கெட் களியாட்டங்களில் பங்குபற்றுவார்கள்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles