நாட்டில் கடந்துள்ள 9 மாதங்களில் மாத்திரம் 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 42 பேர் பலியாகியுள்ளனர். 33 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
