அநுரவின் மேடையில் ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்ற கூட்டத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பாடல் இசைக்கப்பட அதனை கைதட்டியவாறு அவர் கேட்டு மகிழ்ந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை, மூதூர் தொகுதி மாநாடு தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ‘அண்ணாமலை’ படத்தில் வரும் ‘வந்தேன்டா பால்காரன்’ என தொடங்கும் பாடல், அநுரவின் தூய்மையான அரசியல் பயணத்தை குறிக்கும் வகையில் வரிகள் மாற்றப்பட்டு பாடப்பட்டது.

” வந்தாரே அநுரகுமார, அடடா….அவர் நோக்கம் பத்தி பாடப்போறே….

ஜாதிபேதோ ஏதும் இல்லா சேவைதனை செய்திடுவார் பாரு….

அட ஊழல் இல்லா அரசியலை துணிவோடு செய்திடுவார் பாரு…” – என்ற தொனியில் வரிகள் மாற்றப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அநுரவும் மேடையில் அமர்ந்திருந்து கைதட்டியவாறு பாடலை கேட்டு மகிழ்ந்தார்.

Related Articles

Latest Articles