“எந்த வடிவிலும் பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்” – செல்வம் எம்.பி.

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவுக்கு சென்று ஜனநாயகம் பற்றி பேசினாலும், அவர் தலைமையிலான அரசு நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்பதையே புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் காண்பிக்கின்றது. எனவே, எந்த வடிவிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை. அது நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிதாக முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டம் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில் இரண்டும் ஒன்றுபோல்தான் தெரிகின்றது.

புதிய ஏற்பாட்டின் பிரகாரம் ஊடக சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்கள் ஒடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உத்தேச சட்டம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
எனவே, அடக்குமுறை, மோசமான வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், ஜனநாக மரபுகளை ஒடுக்கும் செயல் ஏற்புடையது அல்ல.

ஜனாதிபதி எல்லா இடங்களுக்கும் சென்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார், ஆனால் புதிய பயங்கரவாத திருத்தச்சட்டம் ஊடாக மீண்டும் அடக்குமுறையை கொண்டுவருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? புதிய சட்டமூலம் மீள்பரீசிலனை செய்யப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகின்றார். ஆனால் அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அரசு கூறுகின்றது. எம்மை பொருத்தவரையில் பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு நிகரான புதிய சட்டம் தேவை இல்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles