ஜனாதிபதி ரணில் நாளை ஜேர்மன் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

‘Berlin Global Dialogue’ மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்கின்றார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறுகின்றது.

இவ்விஜயத்தின்போது ஜேர்மன் சான்சிலர், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களும் ஜனாதிபதி சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

கியூபாவில் நடைபெற்ற ஜி – 77 மாநாடு, அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை கூட்டத்தொடர் ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி, அவ்விஜயங்களின் முன்னேற்ற தன்மை குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles