‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடிந்ததும் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள்…!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், ‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வருடம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு, அரசியல் கூட்டணி, தொகுதிகளை பலப்படுத்தல் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்கள் தற்போதிலிருந்தே அரங்கேறிவருகின்றன.

பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு தமது கட்சியின் ஆதரவு அவசியம் என்பதால் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதிக்கு மொட்டு கட்சி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து பஸில் இது தொடர்பில் எடுத்துரைத்துள்ளார் என தெரியவருகின்றது.

இவ்வாறு மொட்டு கட்சி அடம்பிடித்துக்கொண்டிருந்தால் பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுக்ககூடும் என சிலர் கருதுகின்றனர்.

இவ்வாறு பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் அதன் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு, அரசியல் நகர்வுகளைக் கையாண்டு, தனது ஜனாதிபதி பதவியை தக்க வைக்கும் வகையில் ரணில் வியூகம் வகுகக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோல கட்சி தாவல்களும் இடம்பெறவுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles