ஐ.எம்.எப். பிரதிநிதிகள் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலின் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி தலைவரை இன்று (25) சந்தித்து கலந்துரையாடினர்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பொருளாதார, சமூக,
அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அரசு உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.எம்.எப். பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், ,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி Mr.Peter Breuer (Senior. Mission Chief),Ms.Katya Svirydzenka (Dep. Mission Chief),Dr.Sarwat Jahan (IMF Resident Representative), Ms.Manavee Abeyawickrama – (Local Economist),Lan Huong Vu (Communications Dept.) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம்,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,வேலுகுமார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles