“சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு நாடு வந்துள்ளது”

“இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார
நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு தரப்பினர் இந்த அரசில்
அங்கம் வகிக்கின்றனர்.

அதேவேளை, மற்றொரு தரப்பினரை இந்த அரசு பாதுகாத்து வருகின்றது. இப்படியான அரசு எப்படி சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் என சர்வதேசத்துக்கு சவால் விடுக்க முடியும்?

தற்போதைய ஜனாதிபதி (ரணில்விக்கிரமசிங்க) சர்வதேச விசாரணைக்கு
அனுமதி வழங்கமாட்டேன் என்று கூறினாலும், இறுதியாகப் பதவிகளில்
இருந்த மூன்று ஜனாதிபதிகளும் (மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச) சர்வ தேசம் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள். தற்போதுஅவர்கள் யாரின் பாதுகாப்பில் உள்ளார்கள்?

எனவே, தற்போது ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரும் (ரணில்), அவர்
தலைமையிலான அரச தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச
விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles