” அரசியல் வேண்டாம் – அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன்” – அலிசப்ரி!

அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை. எனது அரசியல் பயணம் ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் – என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

” அரசியல் எனக்கு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். அழைப்புகள் வந்தாலும் அதனை ஏற்கும் நிலையில் இல்லை. எனது தொழில்சார் நடவடிக்கையை முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளேன்.

அரசியலுக்கு வந்து ஒரு சதம்கூட சம்பாதித்தது கிடையாது, அதற்கான தேவைப்பாடும் எனக்கு இல்லை. எனது குடும்பத்தாரும் நான் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. நெருக்கடியான நேரத்தில் நாட்டைவிட்டு செல்ல முடியாது. அதனால்தான் நெருக்கடியான காலகட்டத்தில் நிதி அமைச்சு பதவியைக்கூட ஏற்றேன். மே 9 ஆம் திகதிக்கு பிறகு அரசியல் முழுமையாக வெறுத்துவிட்டது. ” – என்றார்.

Related Articles

Latest Articles