அனைத்து அரச ஊழியர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும் இவ்வாறு வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல சேவைகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவிததுள்ளார்










