இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.










