பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்டவையால் திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாதீடு குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பாதீடு வருவதற்கு முன்னரே வற் வரி அதிகரித்துவிட்டது. இதனால் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும். ஏற்கனவே வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் மக்கள் தள்ளாடுகின்றனர். வற்வரி அதிகரிப்பு அவர்கள்மீது மேலும் சுமையை திணிக்கும்.
இந்நிலையில்தான் 6 மாதங்களுக்கு பிறகு கிடைக்கவுள்ள கொடுப்பனவு அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மக்கள் நலன் பற்றி சிந்திக்காத பாதீடே இது.” – என்றார்.