பலாங்கொடை மண்சரிவு – தாய், தந்தை மகள்மாரின் சடலங்கள் மீட்பு!

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்குண்டு தாய், தந்தை மற்றும் இரு மகள்மார் காணாமல்போய் இருந்தனர்.

இதையடுத்து, மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டு தினங்களின் பின்னர் இருவரின் சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர் மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Related Articles

Latest Articles