தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட் கூம்வூட் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை விசேட அதிரடிப்படையினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 320 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் கூறினர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
கௌசல்யா