காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் மீட்கப்பட்ட கடல் கழுகு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இப் பகுதியில் புதிய ரக கழுகு காயமடைந்த நிலையிலேயே மீட்கப் பட்டுள்ளது அவ்வாறு மீட்கப்பட்ட கடல் கழுகு நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் உள்ள ஊழியர் ஒருவரே அந்த கடல் கழுகை பிடித்து, ஒப்படைத்து உள்ளது தெரிய வந்தது உள்ளது.

நோர்வூட் காசல்ரீ நீர் தேக்கத்தை சுற்றி வாழும் கடல் கழுகுகள் மீது காகங்கள் தாக்கியதால், கடல் கழுகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பறக்க முடியாமல், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் பகுதியில் இருந்துள்ளது தெரியவருகிறது.

காயங்களுக்கு உள்ளான கடல் கழுகை அட்டன் பொலிஸ்சாரின் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் அட்டன் பொலிஸ் நிலையத்திக்கு வந்து காயமடைந்த கடல் கழுகை ஹட்டன் பொலிஸாரிட ம் இருந்து பொறுப்பேற்று, ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

செ தி.பெருமாள்

Related Articles

Latest Articles