2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ம/மா/ஹ/ வ / ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
11 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்று சாதனை படைத்தமை இதுவே முதல் தடவையாகும்.
S.ஷான் மெத்தியூ -164,
S.தேசப்ரியன் -161,
L.ஜெமிமா -156,
S.வக்சன் -149,
R.N.P.ரொஷெல் –
149, K.அமிர்தனா -148,
N.கவிஷான் -148,
P.பிரித்திகா -148,
P.பிரனிதா -146,
K.சுப்ரஜா -146,
S.கேஷானி-145
அத்துடன், 40 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
2018ஆம் ஆண்டு 04 மாணவர்களும், 2019ஆம் ஆண்டு ஒரு மாணவனும், 2020ஆம் ஆண்டு 03 மாணவர்களும், 2021ஆம் ஆண்டு 02மாணவர்களும், 2022ஆம் ஆண்டு 04 மாணவர்களும் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்திருந்த நிலையில், இம்முறை 11 மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேற்றுக்காக மாணவர்களை நெறிப்படுத்தி – வழிகாட்டிய முன்னாள் அதிபர் திரு. K. ராஜரட்னம், இந்நாள் அதிபர் திருமதி S.தஜினி, பிரதி அதிபர் P. ராஜேஸ்வரி, வகுப்பாசிரியர்களான திருமதி. பரிபூரணி சண்முகநாதன், திரு. பழனி சண்முகநாதன் ஆகியோரையும் பெற்றோரும், பழைய மாணவர்களும் வாழ்த்தி மகிழ்கின்றனர்.