சாமிமலையில் அம்மன் தாலியை அடகு வைத்த பூசகர் – நடந்தது என்ன?

மஸ்கெலியா, சாமிமலை பெரிய சோளம் கந்த தோட்டத்தில், அம்மன் ஆலயத்தில் அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி மற்றும் தாலி மணி என்பவற்றை ஆலய பூசகர் அடகு வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தாலியும், தாலி மணியும் காணாமல்போய்விட்டது என ஆலய நிர்வாக சபைக்கு தெரியவந்ததையடுத்து, தோட்ட மக்கள் ஆலயத்தின் முன்பாக திரண்டனர்.

இது தொடர்பில் தேடி பார்த்தபோது, குறித்த ஆலயத்தின் பூசகர் நகைகளை அடகு வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. தான் அவ்வாறு செய்ததை ஒப்புகொண்டுள்ள பூசகர், நகைகளை திருப்பி தருவதாக உறுதியளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles