நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரமானது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வியந்திரம் எதிர்வரும் புதன்கிழமை 29ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, செயலிழக்கச் செய்யப்பட்ட இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாகவும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.