2024 ஏப்ரல் மாதத்துக்குள் பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ‘அரசியல் போரை’ முன்னெடுப்பதற்கான வியூகங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்து வருகின்றது என தெரியவருகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைவருடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
வரி விதிப்புகள், பொருட்களின் விலையேற்றம் என்பவற்றால் மக்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ள நிலையில், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அது தமக்கு சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றது.
மக்கள் போராட்டம், சமூகவலைத்தள பிரச்சாரம் உள்ளிட்ட நகர்வுகள் இதற்காக கையாளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுவருகின்றது. 2024 செப்டம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொட்டு – யானை கூட்டணியின்கீழ் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக வருவார் எனவும், இதற்கான பேச்சுகள் பாதீட்டு கூட்டத் தொடரின் பின்னர் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.