ராதாவின் இளைஞர் அணி தலைவர் சஜித்துடன் சங்கமம்! அமைப்பாளர் பதவியும் வழங்கிவைப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி குறித்த நியமனம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் தொடர்பில் அவர் கூறுகையில்,

” ஊவா மாகாணத்தில், குறிப்பாக பசறை தொகுதியில் மக்களுக்கு சேவையாற்ற ஒழுங்கான தலைமைத்துவம் கிடையாது. அது மாத்திரமில்லாமல் தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களின் கைகளிலேயே மாற்றம் தங்கியுள்ளது.எனவே தான் நான் இத்தனை காலமும் பதுளை மக்களுக்கு ஆற்றிய சேவைகள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

லெட்சுமனார் சஞ்சய் , மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles