” இலங்கையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும்போதே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், டிசம்பர் மாதமளவில் ‘வங்குரோத்து நிலை’ யை நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அதன்பின்னர் அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக அரச நிர்வாக பொறிமுறை பலப்படுத்தப்படும்.
ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கி பற்றி இங்கு கதைத்தனர். இலங்கையில் முதலாவது பிரதமரை அனைத்து கட்சிகளும் இணைந்துதான் உருவாக்கின. அன்று ஒற்றுமை இருந்தது. 1956 பொதுத்தேர்தலில் ரூவான்வெல்ல தொகுதியில் ரணசிங்க பிரேமதாச தோல்வி அடைந்தார். அதன்பின்னர் கொழும்பு வந்தார். தோல்வி அடைந்தாலும் நாட்டுக்காக முன்னிலையாகும் ஆளுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.” – என்றார்.