மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட பின்னர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவால் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வன பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.
இறந்த சிறுத்தையை பேராதனை மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்