கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த நிலை உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​கொழும்பு நகரில் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 80 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது டிசம்பரில் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்ட, கிருலப்பனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles