மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி! மலையகத்தில் சோகம்!!

கம்பளை, கொத்மலை கொடகேபிட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.

32 வயது தந்தையும், இரண்டு வயது 10 மாதங்கள் நிரம்பிய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

தமது தோட்டத்துக்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்குண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கம்பளையில் இருந்து சற்று தொலைவிலேயே கொத்மலை டேம் பகுதி அமைந்துள்ளது. அதனைசூழவுள்ள பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles