பஸ் கட்டணம் குறையாது!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாட்டில் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படமாட்டாது என சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Articles

Latest Articles