22,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles