உலகளாவிய ரீதியில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களில் 2.58 மில்லியன் பேர் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று ‘UNICEF’ ஐ மேற்கோள்காட்டி அறிக்கைகள் கூறுகின்றன.
தினமும் 740 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு தரவுகளுடன் தொடர்புடைய அறிக்கை எய்ட்ஸ் மற்றும் அது தொடர்பான நோய்களால் தினமும் 274 பேர் உயிரிழிப்பதாக தெரிவிக்கின்றது.
இந்நிலையில், எய்ட்ஸ் நோயால் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13.9 மில்லியன் குழந்தைகள் உள்ளனர்.
உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு எய்ட்ஸ் மற்றும் அதைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்குமான வசதிகள் பற்றிய புரிதல் இன்னும் இல்லை எனவும் அதன் பரவல் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தொடர்புடைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் உலக மக்களுக்கு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக பெயரிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.