உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்பவலயத்திற்காக இலங்கை வழங்கக்கூடிய தலைமைத்துவம் குறித்து அவதானம் செலுத்தி, COP28 மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பில்கேட்ஸிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல், தரவுக் கட்டமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவத்திற்காக “Bill & Melinda Gates” மூலம் ஆதரவு வழங்குவதாக பில்கேட்ஸ் உறுதியளித்தார்