மேல் மாகாணம் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 5 மணிக்கு திறக்கப்படலாம். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதற்கான சாத்தியம் இல்லை – என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
” 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டை தொடர்ந்தும் முடக்கிவைக்கமுடியாது, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மக்கள் வழங்கவேண்டும். ” – என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.