” மலையக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 784.
தோட்டங்களில் வேலை இல்லை. இருந்தும் பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192.
பெருந்தோட்ட பகுதிகளில் தங்கியுள்ள குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 976. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
இவர்களுக்கான சம்பளம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம் போன்ற விடயங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்பது கசப்பான உண்மையாகும்.
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.”
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் தெரிவித்தார்.