” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம், 2 ஆயிரம் என சம்பளத்தை நிர்ணயித்துக்கொண்டிருக்காமல், அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உங்களால் (ரணில் அரசு) செய்ய முடியாவிட்டால் எங்கள் ஆட்சியில் அதனை நிச்சயம் செய்வோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.