கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்

கர்ப்பிணி பெண்ணின் இதய துடிப்பு சீராக இல்லை என்று ஸ்மார்ட் வாட்ச் மெசேஜ் அனுப்பியதை அடுத்து அந்த கர்ப்பிணி பெண் தகுந்த நேரத்தில் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதால் காப்பாற்றப்பட்டார்.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் தனக்கு உதவி செய்து, தன் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க பெண் ஒருவர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

குறித்த  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் வெரோனிகா என்ற இளம்பெண் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  அவர் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த நிலையில் அதிலிருந்து அவரது மொபைல் போனுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்பட்டது.

அதில் அவருடைய இதய துடிப்பு சாதாரண அளவை தாண்டி இருப்பதாகவும் இன்னும் சில நிமிடத்தில் மூச்சு விடுவதில் சிரமம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மெசேஜ் இருந்தது

இதனை பார்த்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து கொண்ட  மருத்துவர்கள் உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்து தாய், சேய் ஆகிய இருவரையும் காப்பாற்றினர்.

மேலும் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது ஆப்பிள் வாட்ச் என்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles