உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்க முடியாது – சம்பந்தன் திட்டவட்டம்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடியைக்’ காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர், அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராய்வதுடன், அடுத்த புதிய பாராளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பை கடந்த 13 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அச்சந்திப்பு பிற்போடப்பட்டது.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆஷு மாரசிங்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், தவராஜா கலையரசன், ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் ” நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.” – என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles