நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 996 சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 929 ஆண்களும், 79 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்களில் 185 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 33 பேருக்கு சொத்து சம்பந்தமான விசாரணைகள் இடம்பெறுகின்றன. 209 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
2 கிலோவுக்கு மேற்பட்ட ஹொரோயின், ஒரு கிலோ ஐஸ், 73 ஆயிரம் கஞ்சா செடிகள், 12 ஆயிரத்து 200 கிலோ கஞ்சா, ஏனைய போதைப்பொருட்கள் 10 கிலோ மற்றும் போதை மாத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த 17 ஆம் திகதி முதல் ‘யுக்திய ஒப்பரேஷன்’ என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
17 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம்வரை (21) 8 ஆயிரத்து 689 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன. 8 ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 353 பெண்கள்.
நாட்டில் நேற்றும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
