கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கம்பளை, எக்கால பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கொவிட் மரணம் இதுவாகும்.
கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.